அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் சென்னை நகருக்கு தென்மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மாங்காட்டிலுள்ள அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு ஆதி காமாட்சி, தவக்காமாட்சி (தபசு காமாட்சி) என வேறு திருப்பெயர்களும் உண்டு. காஞ்சி காமக்கோட்டத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் எழுந்தருளும் முன்பே மாங்காட்டில் தவம் புரிந்து பின்னர் காஞ்சிபுரம் சென்று திருமணம் செய்ததாக வரலாறு. கயிலாயத்தில் சிவபெருமானின் கண்கணை விளையாட்டாக உமையவள் தன் இரு கரங்களால் மூட பூலோகம் இருண்டு அனைத்து உயிரினங்களும் துன்பப்பட்டன. அந்த பாவத்தைப் போக்க இப்பூவுலகில் மாமரங்கள் அடர்ந்த இம்மாங்காட்டில் பஞ்சாக்கினியில் இடது கால் கட்டை விரல் நுனியில்...
06:00 AM IST - 01:30 PM IST | |
03:00 PM IST - 08:45 PM IST | |
01:30 PM IST - 03:00 PM IST | |
திங்கள், புதன், வியாழன், சனி - காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரையும் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். சிறப்பு நாட்களான ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். |