அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Kamakshi Amman Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001649]
×
Temple History
தல பெருமை
சென்னை நகருக்கு தென்மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. காஞ்சி காமக்கோட்டத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் எழுந்தருளும் முன்பே மாங்காட்டில் தவம் புரிந்து பின்னர் காஞ்சிபுரம் சென்று திருமணம் செய்ததாக வரலாறு. மாங்காட்டிலுள்ள அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு ஆதி காமாட்சி, தவக்காமாட்சி என வேறு திருப்பெயர்களும் உண்டு.
கயிலாயத்தில் சிவபெருமானின் கண்கணை விளையாட்டாக உமையவள் தன் இரு கரங்களால் மூட பூலோகம் இருண்டு அனைத்து உயிரினங்களும் துன்பப்பட்டன. அந்த பாவத்தைப் போக்க இப்பூவுலகில் மாமரங்கள்...சென்னை நகருக்கு தென்மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. காஞ்சி காமக்கோட்டத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் எழுந்தருளும் முன்பே மாங்காட்டில் தவம் புரிந்து பின்னர் காஞ்சிபுரம் சென்று திருமணம் செய்ததாக வரலாறு. மாங்காட்டிலுள்ள அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு ஆதி காமாட்சி, தவக்காமாட்சி என வேறு திருப்பெயர்களும் உண்டு.
கயிலாயத்தில் சிவபெருமானின் கண்கணை விளையாட்டாக உமையவள் தன் இரு கரங்களால் மூட பூலோகம் இருண்டு அனைத்து உயிரினங்களும் துன்பப்பட்டன. அந்த பாவத்தைப் போக்க இப்பூவுலகில் மாமரங்கள் அடர்ந்த இம்மாங்காட்டில் பஞ்சாக்கினியில் இடது கால் கட்டை விரல் கால் நுனியில் நின்று கடுந்தவம் புரிந்தாள்.
தவம் புரியும் அம்மனுக்கு அருள்புரிய ஈஸ்வரன் வெள்ளீஸ்வரராக இத்தலத்தில் காட்சி அளித்தார். அதனால் சிவசக்தி சங்கமம் உலகுணர நிறைவேறிற்று. அருள்மிகு வெள்ளீஸ்வரருக்கு பார்கவேஸ்வரர் என்ற வேறு திருநாமமும் உண்டு. கண் பார்வை இழந்த சுக்கிராச்சாரியாருக்கு பார்வை தந்து காட்சி அளித்தார்.
இத்தலத்தில் அருள்மிகு வெள்ளீஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக, சீர்வரிசையாக கணையாழியுடன் வந்த அருள்மிகு வைகுண்டப் பெருமாள் வலக்கரத்தில் பிரயோக சக்கரத்துடனும் மற்றொரு கையில் கணையாழியுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
பின் பல யுகங்கள் கழிந்தன. எனினும் அன்னையின் தவ அக்னி வெப்பத்தால் இப்பூமி வெப்பமானது. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ துன்பப்பட்டன. இச்சூழலில் கேரளா மாநிலம் காலடியில் தோன்றிய ஞானி ஸ்ரீஆதிசங்கரர் இத்தலத்திற்கு வருகை தந்து அன்னையின் ருத்ரம் தணியும் வண்ணம் சிவசக்தி இருப்பிடமான அபூர்வ அர்த்தமேரு எனும் 43 திரிகோணங்கள் கொண்ட ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்ட்டை செய்தருளினார். இந்த ஸ்ரீசக்கரம் எட்டுவித மூலிகைகளால் ஆனதாகும். .இவ்வாலயத்தில் அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலவராக காட்சி அளிப்பது விசேஷ சிறப்பாகும்.